ஆன்மீகம்
பத்ர ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு புதனின் அருளால் தடைபட்ட காரியங்கள் வெற்றி பெறும்!

ஜூன் 6 முதல் ஜூன் 22, 2025 வரை புதன் கிரகம் தனது சொந்த ராசியான மிதுனத்தில் பயணம் செய்ய உள்ளதால், பத்ர ராஜயோகம் ஏற்படுகிறது. இது சில ராசிகளுக்கு அபூர்வமான அதிர்ஷ்டம், நிதி லாபம், வேலை வாய்ப்பு, கல்வி வெற்றிகள் போன்ற பல நன்மைகளைத் தரும்.
புதன் தனது அதிபதியாக உள்ள மிதுன ராசியில் நடமாடுவது மிகவும் சக்திவாய்ந்த யோகத்தை உருவாக்கும். மேலும், அதே நேரத்தில் குரு பகவானும் மிதுனத்தில் இருப்பதால், இந்த பத்ர ராஜயோகம் இரட்டிப்பு பலன்களை தரும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்காலப்பகுதியில் கீழ்க்கண்ட 4 ராசிக்காரர்கள் பெரும் ஆதாயங்களை பெறுவார்கள்:
1. சிம்ம ராசி (Leo):
பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட முதலீடுகள் மூலம் நன்மை கிடைக்கும். கல்வியில் சிறந்த முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத நிதி ஆதாயம் சாத்தியமாகும்.
2. கன்னி ராசி (Virgo):
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் கூடும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் நிதி ஆதாயம் பெருகும். வாழ்க்கையில் திருப்தி அதிகரிக்கும்.
3. கும்ப ராசி (Aquarius):
சிந்தனையில் தெளிவும், செயல்களில் வெற்றியும் அதிகரிக்கும். பழைய மனக்கசப்புகள் நீங்கும். நெருங்கிய உறவுகளில் சமரசம் ஏற்படும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிட்டும்.
4. மீன ராசி (Pisces):
தடைபட்ட பணிகள் முடிவடையும். சொத்து வாங்கும் திட்டம் வெற்றியாகும். பெற்றோர் ஆசிர்வாதத்துடன் உயர்வான வாழ்க்கையை நோக்கி பயணிக்கலாம். ஆன்மீக யாத்திரை செய்யும் வாய்ப்பு ஏற்படும்.















