வேலைவாய்ப்பு
படிக்க எழுத தெரிந்தால் போதும்! ரூ.36,800 வரை சம்பளத்துடன் அறநிலைத்துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு சார்ந்த சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்குத் தமிழ் மொழியில் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் மற்றும் சம்பளம்:
மேளக்குழு (1 இடம்)
தேவையான தகுதி: இசை பயிற்சி சான்றிதழ்
ஊதியம்: ரூ.15,300 – ரூ.48,700
பரிசாரகர் (1 இடம்)
தேவையான தகுதி: பிரசாதம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் அனுபவம்
ஊதியம்: ரூ.13,200 – ரூ.41,800
அலுவலக உதவியாளர் (1 இடம்)
தேவையான தகுதி: குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம்: ரூ.12,600 – ரூ.39,900
அத்யாபகம் (1 இடம்)
தேவையான தகுதி: ஆகம/வேத பாடசாலையில் 3 ஆண்டு பயிற்சி சான்றிதழ்
ஊதியம்: ரூ.11,600 – ரூ.36,800
பகல் காவலர் (4 இடங்கள்), இரவு காவலர் (2 இடங்கள்), திருவலகு (3 இடங்கள்)
தேவையான தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருத்தல்
ஊதியம்: ரூ.10,000 – ரூ.36,800
விண்ணப்பத்திற்கான முக்கிய விவரங்கள்:
வயது வரம்பு: குறைந்தது 18 வயது, அதிகபட்சம் 45 வயது
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பம் செய்ய: https://hrce.tn.gov.in/ இல் இலவசமாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்
விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள் மற்றும் ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் ஒட்டிய சுயவிலாச ஒப்புகை அட்டை சேர்க்க வேண்டும்
விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்,
எண்.6, எம்.என்.பி. கோயில் தெரு,
எழும்பூர், சென்னை – 600008.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025 மாலை 5.45 மணிக்குள்.















