ஆன்மீகம்
சனியின் மூன்றாம் பார்வை சூரியனில் விழும் மகா நிகழ்வு! மே 15 முதல் ரிஷபம், துலாம், மகர ராசிக்காரர்கள் கவனமா இருங்கள்!

சூரியனில் விழும் சனியின் மூன்றாம் பார்வை! மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இருங்கள்!
வேத ஜோதிடக் கணிப்புகள் படி, சனியின் பார்வைகளில் மூன்றாம் பார்வைக்கு மிகுந்த தாக்கமும், தீவிரமும் உள்ளது. சனியின் மூன்றாம் பார்வை, சூரியன் மீது விழும் முக்கியமான நிகழ்வு மே 15, 2025 முதல் ஏற்படவுள்ளது. இதன் விளைவாக, சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஜோதிடங்கள் எச்சரிக்கின்றன.
சூரியன் ரிஷப ராசிக்கு இடமாற்றம்:
தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். ஆனால் மே 15 ஆம் தேதி, சூரியன் ரிஷப ராசியில் நுழைகிறார். இதே சமயம் கும்ப ராசியில் உள்ள சனி, தனது மூன்றாம் பார்வையை ரிஷப ராசியில் உள்ள சூரியன் மீது செலுத்துகிறார்.
சனியின் பார்வையால் பாதிக்கப்படும் முக்கியமான 3 ராசிகள்:
1. ரிஷபம்:
சூரியன் ரிஷபத்தின் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தந்தையுடன் கருத்து முரண்பாடுகள், குடும்பத்தில் பதட்டம், எதிர்பாராத செலவுகள் உருவாகும்.
வேலை தொடர்பான குழப்பங்கள், பணவஷ்டிகள் ஏற்படலாம்.
அதிக கோபம், மன அழுத்தம், உடனிருந்தவர்களுடன் தகராறு என சிக்கல்கள் அதிகரிக்கும்.
சிந்தித்து செயல்பட வேண்டும்.
2. துலாம்:
சூரியன் 8-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தொழில் வாழ்க்கையில் சவால்கள் அதிகம்.
முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தவறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
புதிய வேலை வாய்ப்பு முயற்சிகள் சிறிது நேரம் தள்ளுபடி செய்யப்படலாம்.
பண செலவில் கட்டுப்பாடு அவசியம், இல்லையெனில் நிதி நிலை பாதிக்கப்படும்.
3. மகரம்:
சூரியன் 5-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், சோம்பல் மற்றும் சிதறல் அதிகமாகும்.
மாணவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும்.
நீதிமன்ற சம்பந்தப்பட்ட விஷயங்கள் மன அழுத்தத்தை தரும்.
முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்ற பிறகு மட்டுமே முடிவெடுக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்
திட்டமிட்டு செலவிடுங்கள்
தந்தையுடன் பொறுமையுடன் பேசுங்கள்
பொறுமையுடன் செயல்படுவது நல்ல பலன்களைத் தரும்










