வேலைவாய்ப்பு
மத்திய அரசின் யூனியன் வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் உதவி மேலாளர் வேலை! டிகிரி போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி மே 20!

யூனியன் வங்கியில் 500 உதவி மேலாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனியன் வங்கியில் (Union Bank of India) 500 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2025 மே 20 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்:
பணி: உதவி மேலாளர் (Assistant Manager)
மொத்த காலிப்பணியிடங்கள்: 500
சம்பளம்: மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை
வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதும், அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (சாதாரண/EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
கல்வித் தகுதி:
1. உதவி மேலாளர் (கடன் பிரிவு):
ஏதேனும் பட்டம் (Degree) – இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிதி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்
CA/ CMA (ICWA)/ CS/ MBA/ MMS/ PGDM/ PGDBM போன்ற பட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
2. உதவி மேலாளர் (IT பிரிவு):
BE/ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech/ 5 வருட ஒருங்கிணைந்த M.Tech
துறைகள்: கணினி அறிவியல், ஐடி, மின்னணு, டெலிகம்யூனிகேஷன், டேட்டா சயின்ஸ், AI, சைபர் பாதுகாப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள்
விண்ணப்பக் கட்டணம்:
SC/ ST/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் – ரூ.177
பிற விண்ணப்பதாரர்கள் – ரூ.1180
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ இணையதளம்: www.unionbankofindia.co.in
கடைசி நாள்: 20.05.2025
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!





















