ஜோதிடம்
விபத்துக்களால் பாதிப்பு உண்டாகும் ஜாதக அமைப்புகள் யாருக்கு எப்படி இருக்கும்?

விபத்து என்பது வாகன விபத்து மட்டுமல்ல. அகால மரணம், துர் மரணம், கொலை, தற்கொலை, இயற்கை பேரிடர்களான புயல், வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், இடி, மின்னல் பாதிப்புகள் ஆகியவையும் ஆகும்.
ஒருவருக்கு விபத்துக்கள் அவரவர் ஜாதகப்படியும் ஏற்படும். தாய் தந்தையர், உற்றார் உறவினர் ஜாதகப்படியும் ஏற்படும். சில நேரங்களில் நமக்கு எதிரே வருபவரின் ஜாதகப்படியும் ஏற்படக்கூடும்…
முன் காலங்களில் வாகனங்கள் இல்லை. ஆனால் போர், கலவரம் போன்றவை காரணமாக உடல் ஊனங்களும் மரணங்களும் நிகழ்ந்தன.
இத்தகைய திடீர் நிகழ்வுகளால் குடும்பத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவே ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இப்போது மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகின்றன.
சரி… யாருக்கு கிரகநிலை எப்படி இரேந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் பார்ப்போமா….
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்குரிய கிரகமும், எட்டாம் இடத்திற்குரிய கிரகமும், ராகுவும் இந்த மூன்றும் சேர்ந்து ராசியில் அமைந்தால் அவருக்கு விபத்தினால் மரணம் உண்டாகும்.
லக்கினாதிபதி கிரகம் இருக்கும் ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் எட்டாவது ராசிக்குரிய கிரகமும் ராகுவும் சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் சேர்ந்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் விபத்தினால் மரணம் உண்டாகும்…
லக்னத்திலோ அல்லது லக்னத்திற்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் விபத்தினால் காயங்களோ ஊனங்களோ உண்டாகும்…
லக்னத்திற்கு நான்காமிடத்து கிரகம் நின்ற ராசிக்கு 1,5,9 வந்து ராசிகளில் செவ்வாய், ராகு சேர்ந்து இருந்தால் ஜாதகரின் தாய் விபத்தில் மரணமடைவார்.
லக்னத்திற்கு மூன்றாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் இளைய சகோதரனுக்கு விபத்து ஏற்படும்.
லக்னத்திற்கு ஐந்தாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் முதல் குழந்தைக்கு விபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு.
லக்னத்திற்கு ஏழாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் மனைவி விபத்தில் மரணம் அடைவார்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்திற்குரிய கிரகம் இருந்த ராசிக்கு 1,5,9 வந்து ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் கணவன் விபத்தில் மரணம் அடைவார்.
லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் தந்தை விபத்தில் மரணம் அடைவார்.
லக்னத்திற்கு பதினோராம் இடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1,5,9 வது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரனுக்கு விபத்து ஏற்படும் வாய்ப்புண்டு.
இதுபோன்ற கிரக அமைப்பு ஜாதக அமைப்பு உடையவர்கள் அதனை துல்லியமாக அறிந்து உரிய பரிகாரங்களை செய்து விபத்துக்களை தடுத்துக் கொள்ளுங்கள்….


















