வணிகம்
கூகுளில் வேலையிழந்த இந்தியர்களின் H-1B விசா என்ன ஆகும்? ஊழியரின் அதிர்ச்சி பதிவு

சமீபத்தில் கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 12,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் இதனால் இந்தியர்கள் உள்பட பல நாட்டின் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் கூகுளில் வேலை இழந்த இந்தியர்கள் கையில் இருக்கும் H-1B விசா என்ன ஆகும் என்பது குறித்து வேலை இழந்தவர்களின் பதிவுகளை பார்க்கும்போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
H-1B விசா என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குள் நுழைவதற்கு தற்காலிகமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை விசா ஆகும். வேலை வழங்கும் அமெரிக்க நிறுவனம் வேலை வெறும் பிற நாட்டு ஊழியர்களுக்காக இந்த விசாவிற்கு விண்ணப்பம் செய்யும்.
இந்த விசா அதிகப்படியாக மூன்று ஆண்டுகள் வரையும் அதன் பிறகு தேவைப்பட்டால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலும் நீடிக்க முயலும். அமெரிக்கா பாதுகாப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகள் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அதில் ஏராளமான இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூகுளில் இருந்து வேலை இழந்த இந்தியர் ஒருவர் தனது லிங்க்டின் பக்கத்தில் சற்று முன்பு தனக்கு தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக மெயில் வந்ததாகவும், இதனால் எனது H-1B விசா இன்னும் 60 நாட்களில் காலாவதி ஆகிவிடும் என்றும், 60 நாட்களுக்குள் நான் வேலை தேடவில்லை என்றால் என்னுடைய விசா காலாவதி ஆகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டுமின்றி இன்னும் ஏராளமான கூகுளில் வேலை இழந்த இந்தியர்களின் விசா 60 நாட்களில் காலாவதி ஆகிவிடும் என்றும் அதற்குள் வேலையை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பதிவு செய்து வருகின்றனர்.
H-1B விசாவுக்கு கூகுள் 60 நாட்கள் மட்டும் கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் அதற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் கூகுளில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டியது தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.