Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் ( டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 வரை )

Published

on

weekly prediction வாரபலன் weekly horoscope

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

தனது நலத்துடன் அடுத்தவர் நலத்தையும் சேர்த்து பார்க்கும் குணமுடைய மேஷராசியினரே நீங்கள் புதுமைகளை விரும்புகிறவர். இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் முடிவில் நன்மை நடக்கும். மனசஞ்சலம் நீங்கும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். அரசாங்க ரீதியிலான அனுகூலம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பணியின் நிமித்தமாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்திதரும். வீண் கவலை ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;

**************************************************************

ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்களை செய்யும் குணமுடைய ரிஷப ராசியினரே, இந்த வாரம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இருந்து வந்த தடைகள் அகலும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்த சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மேலிடத்திடம் இருந்து வ்ந்த பிணக்குகள் நீங்கும்.

குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடைநீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும்.

மாணவர்கள் பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும், சுக்கிர பகவானுக்கு மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால் மனது மகிழும்படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி;

**************************************************************

மிதுனம்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

சமய சந்தர்ப்பம் அறிந்து காரியங்களை செய்யும் மிதுன ராசியினரே நீங்கள் நுட்பமாக எதையும் ஆராய்வதில் வல்லவர். இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. திடீர் உடல்நலபாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். நிதானமான போக்கு காணப்படும். பணவரத்து நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்திற்காக கடன் எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்த இடத்தில் கடன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்திடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இளைய சகோதர சகோதரிகளிடம் நிலவி வந்த வருத்தங்கள் நீங்கும்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரியதாமதமும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை.
மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: மதுரை மீனாட்சியையும் சொக்கநாதரையும் வணங்கி வருவதுடன் நவகிரகத்தில் புதனுக்கு பச்சை பயிறு சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

**************************************************************

கடகம்

(புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

தந்திரமாக எதையும் செய்யும் கடக ராசியினரே, நீங்கள் மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர். இந்த வாரம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியத்தில் இருந்து வந்த தாமதம் நீங்கி வேகம் எடுக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் வேகம் பெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

மாணவர்கள் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.

பரிகாரம்: பவுர்ணமி பூஜை செய்து சந்திரனை வணங்கி தயிர் சாதத்தை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

**************************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

சாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடும் சிம்ம ராசியினரே, சில நேரங்களில் ஏற்படும் திடீர் கோபத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பீர்கள். இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். பணம் சம்பந்தபட்ட விஷயங்களில் சாதகமான பலன்கள் இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பங்குதாரர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுகிழமையில் நவகிரகத்தில் சூரியனை வணங்கி கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை நைவேதியம் செய்து ஏழைகளுக்கு வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

**************************************************************

கன்னி

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
பருவநிலை மாற்றம் போல் சில காரியங்களில் வெற்றி சில காரியங்களில் தோல்வி என்று மாறி மாறி அனுபவிக்கும் கன்னி ராசியினரே, இந்த வாரம் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த அலைச்சல்களும் குறையும். சுபச்செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் வரவும் இருக்கும். உடல் ஆரோக்யம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும். தொழில் மேன்மை அடைவதற்கான வழிகளைக் காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். எடுத்து கொண்ட பணிகளை சிரமமின்றி செய்வீர்கள்.

குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும்.

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனை குறையும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

**************************************************************

துலாம்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

காந்தம் இழுப்பது போல் எவரையும் தம்பால் இழுத்துக்கொள்ளும் சக்தி படைத்த துலா ராசியினரே, இந்த வாரம் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது. எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.பெண்கள் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறி நிலை மாறும். புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்தரும். வீண் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். மேலிடம் உங்களை மதித்து உங்கள் பதவி உயர்வைத் தருவார்கள். சக ஊழியர்களுடன் வீண் கருத்து மோதல்கள் வரலாம்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு மனவருத்தங்கள் தோன்றி நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழயைல் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சனை சொத்து தகராறு தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

**************************************************************

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

நலிந்தவர், நியாமுள்ளவர்களுக்காக போராடும் குணமுடைய விருச்சிக ராசியினரே, இந்த வாரம் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து

மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற வீண் பயம் ஏற்படலாம்.
வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல

உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்

எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும்.

குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள்.

பெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும்.

மாணவர்களுக்கு உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். கல்வியில் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோ தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

**************************************************************

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

எந்த ஒரு வேலையும் மிகவும் சரியாக நடக்க வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தனுசு ராசியினரே, இந்த வாரம் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள். மேலிடத்தின் மூலம் இருந்து வந்த நெருக்கடிகள் அகலும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல பலன் அடைவார்கள். சுபநிகழ்ச்சிகளுக்கான ஆரம்ப விஷயங்கள் இனிதே நடைபெறும்.

பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

**************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

சுயநலமற்று சமூக நன்மைக்காக பாடுபடும் குணமுடைய மகர ராசியினரே, நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுத்து வந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதே வேளையில் அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். தைரியம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் கவனமாக பணி செய்வது நல்லது.
குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை நடந்து முடியும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரியதடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

**************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

நிர்வாக திறமையும், குடும்ப பொறுப்பும் மிக்க கும்ப ராசியினரே, இந்த வாரம் பணவரத்து இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். புதிய நட்புகள் கிடைக்கும்.

பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை.
மாணவர்கள் சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி சனிஸ்வர பகவானையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
**************************************************************மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மன உறுதியுடன் இருக்கும் மீன ராசியினரே, நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். புதிய தொடர்புகள் உண்டாகும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பலவகையிலும் வருமானம் வரும். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.
குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் – நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
**************************************************************

kamal
சினிமா4 mins ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

Uncategorized11 mins ago

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

தினபலன்20 mins ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (02/04/2023)!

வணிகம்33 mins ago

இன்று தங்கம் விலை (02/04/2023)!

சினிமா42 mins ago

’கர்ப்பமாக இருந்தால் நானே சொல்வேன்’- மணிமேகலை காட்டம்!

சினிமா செய்திகள்8 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்9 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்9 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்10 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா12 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

வேலைவாய்ப்பு4 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!