இந்தியா
ரூ.100, ரூ.10, ரூ.5 பழைய ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது? – ரிசர்வ் வங்கி விளக்கம்

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்தாண்டு புதிய 100 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பழைய 5,10, 100 ரூபாய் நோட்டுகள் மார்ச், ஏப்ரல் மாதத்திலிருந்து செல்லாது என்றும் அதன்பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் இருக்காது என்றும் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இது செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில், பழைய வரிசை கொண்ட ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் செல்லத்தக்கது என்று என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே 10 ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என்று கூறி வந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கிக் கொள்ளால், பயன்படுத்தாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.