ஜோதிடம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி-சுக்கிரன் இணைவு: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட்!

சனி மற்றும் சுக்கிரன் கிரகங்கள் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகின்றன. இந்த விஷேஷக் சேர்க்கை 3 ராசிகளுக்கு அபரிமிதமான பலன்களை வழங்கப்போகிறது. ஜோதிட ரீதியாக சனி மற்றும் சுக்கிரன் இருவரின் நிலைகள் மிக முக்கியமானவை. இந்த இரண்டு கிரகங்களின் சந்திப்பு அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியை சில ராசிகளுக்கு அளிக்கும்.
சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாறுகிறார். சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார். இந்த ஆண்டின் இறுதியில், டிசம்பர் 28, 2024 அன்று இரவு 11:48 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். கும்ப ராசியில் சனி ஏற்கனவே இருப்பதால், இந்த சனி-சுக்கிரன் இணைவு ஜனவரி 28, 2025 வரை நீடிக்கும்.
இந்த விஷேஷ சேர்க்கையால் அதிக நன்மைகளைப் பெறும் 3 ராசிகள்:
ரிஷப ராசி
சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை தரும். இந்த சந்திப்பு பத்தாம் வீட்டில் நிகழ்வதால், தொழில், வியாபாரம், மற்றும் சொத்து ஆகிய துறைகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் சுயமரியாதையும் செல்வாக்கும் உயர்வடையும்.
கடக ராசி
ஆறாம் வீட்டில் சனி மற்றும் சுக்கிரன் இணைவதால், கடக ராசிக்காரர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். எதிரிகளை வென்று போட்டியாளர்களுக்கு கைகொடுக்கலாம். உங்கள் ஆரோக்கியம் பலமாகும், வேலை வாய்ப்புகளில் நன்மைகள் கிடைக்கும், கடனில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் உண்டாகும்.
விருச்சிக ராசி
நான்காவது வீட்டில் இந்த கிரகங்கள் இணைவதால், விருச்சிக ராசிக்காரர்கள் பொருளாதார செழிப்பை அடைவேர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். புதிய வீடு அல்லது வாகனத்தை வாங்கும் கனவு நனவாகும். இதனுடன், அரசுத் துறைகளில் வெற்றி மற்றும் நீதிமன்ற வழக்குகளில் சாதனைகள் கிட்டும்.
இந்த சேர்க்கை உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதிர்ஷ்டம் தரும் இந்த கிரகப் பெயர்ச்சியில் உங்கள் ராசியைச் சரிபார்த்து பாருங்கள்!



















