ஆன்மீகம்
பிப்ரவரி 4-ம் தேதி திருப்பதி: ஆர்ஜித சேவைகள் ரத்து, முக்கிய அறிவிப்புகள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
பிப்ரவரி 4-ம் தேதி திருப்பதி செல்லும் devotees! இந்த தகவல்கள் உங்களுக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!
திருப்பதி திருமலையில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி ரதசப்தமி விழா மிகப் பெரிய முறையில் கொண்டாடப்பட இருக்கின்றது. அதையொட்டி, திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த நாளில் பல முக்கிய மாற்றங்கள் உள்ளன.
அவருடைய பேச்சின் படி, 4-ம் தேதி அன்று ஆர்ஜித சேவைகள், அஷ்டதள பாத பத்மாராதனை, திருக்கல்யாண சேவை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளன. 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது. விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்களும் வழங்கப்பட மாட்டாது.
பாதுகாப்பு பணிகளுக்காக 1,000 தேவஸ்தான கண்காணிப்பு படையினர் மற்றும் 1,250 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு 8 லட்சம் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படவுள்ளன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















