ஆன்மீகம்
ஜோதிட ராசிகளும் அவர்களின் அமானுஷ்ய சக்திகளும் – உங்கள் ராசிக்குரிய மறைமுக திறனை அறிந்துகொள்ளுங்கள்!

ஜோதிட ராசிகளும் அவர்களின் அமானுஷ்ய சக்திகளும்
ஜோதிடத்தின் படி, மனித வாழ்வில் நவகிரகங்களின் தாக்கம் மிகுந்தது. ஒருவர் பிறக்கும் பொழுது கிரகங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரின் ராசி மற்றும் வாழ்க்கை பாதைகள் தீர்மானிக்கப்படுகின்றன. 12 ராசிகளும் தனித்தனியான அதிபதியைக் கொண்டுள்ளன. அதன் தாக்கத்தால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணாதிசயங்களும், உள்ளுணர்வு சார்ந்த அமானுஷ்ய சக்திகளும் உருவாகின்றன.
ஒவ்வொருவருக்கும் பிறவியிலேயே சில மறைமுக சக்திகள் உள்ளன. சிலர் தங்களின் மன ஆற்றலால் சூழ்நிலைகளை புரிந்துகொள்ளும் திறனும், சிலர் உணர்ச்சி மற்றும் உள்ளுணர்வால் பிறரை வழிநடத்தும் திறனும் பெற்றிருப்பார்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு என்ன அமானுஷ்ய சக்திகள் உள்ளன என்பதை பார்ப்போம்.
மேஷம் – எப்போதும் சரியான இடத்தில், சரியான நேரத்தில் இருந்து வாய்ப்புகளைப் பயன்படுத்தும் திறன்.
ரிஷபம் – ஆறாவது அறிவு (Sixth Sense), வஞ்சகர்களை எளிதில் கண்டுபிடிக்கும் திறன்.
மிதுனம் – சூழலுடன் இணைந்து, அருகிலுள்ளவர்களின் உணர்ச்சிகளை உணரும் சக்தி.
கடகம் – பிறரின் உணர்ச்சிகளை உணர்ந்து, ஆழ்ந்த மனதோடு தொடர்பு கொள்ளும் திறன்.
சிம்மம் – நேர்மறை ஆற்றல், உற்சாகம் மற்றும் தைரியத்தால் அனைவரையும் கவரும் வல்லமை.
கன்னி – வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை முன்கூட்டியே உணர்ந்து விவேகமாக செயல்படும் திறன்.
துலாம் – பிறரை நன்கு புரிந்து, சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் சக்தி.
விருச்சிகம் – பிறரைப் பயன்படுத்திக் கொள்ளும் மனவியல் அறிவு மற்றும் உறுதியான சிந்தனை.
தனுசு – இயற்கையான நம்பிக்கை, சவால்களை ஆராய்ந்து வெற்றி பெறும் ஆற்றல்.
மகரம் – வாழ்க்கையின் வேகத்தை உணர்ந்து, பொறுமையுடன் சரியான நேரத்தில் முடிவு எடுக்கும் திறன்.
கும்பம் – கடினமான சூழ்நிலைகளில் கூட தப்பிக்க திறமையான திட்டங்களை உருவாக்கும் வல்லமை.
மீனம் – இலக்கை ஒருபோதும் இழக்காமல், எதிர்மறையான விளைவுகளை உள்ளுணர்வால் முன்கூட்டியே அறியும் திறன்.
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான இந்த அமானுஷ்ய சக்திகள் அவர்களை வாழ்வில் சிறப்பானவர்களாக ஆக்குகின்றன.