Connect with us

சிறு தொழில்

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

Published

on

மாத சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் பலருக்கும் நாம் ஏன் ஒரு பிஸ்னஸ் தொடங்க கூடாது, எத்தனை நாள் தான் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும். ஆனால் என்ன பிஸ்னஸ் செய்வது என்று கேட்டால் அதில் மிகப் பெரிய குழப்பம் இருக்கும்.

அப்படி என்ன பிஸ்னஸ் செய்வது என்ற குழப்பத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் எதிரான விழிப்புனர்கள் அதிகளவில் உள்ள நிலையில், நாம் ஜூஸ், இளநீர் குடிக்க பயன்படுத்தும் ஸ்டிராவும் இப்போது பேப்பராக மாறி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பேப்பர் ஸ்டிரா தயாரிப்புக்குச் சந்தையில் அதிக டிமாண்ட் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூஸ், இளநீர் கடைகள் மட்டுமல்லாமல் பவுச் வடிவில் இப்போது ஜூஸ், பால் வகைகள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இப்படி பல்வேறு தயாரிப்புகளைச் செய்யும் நிறுவனங்களுக்கு பேப்பர் ஸ்டிரா தேவை அதிகம் உள்ளது.

இப்படி தேவை அதிகரித்து வரும் இந்த பேப்பர் ஸ்டிராவை தயாரிப்பது எப்படி? அதனைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் என்ன? என்ன லைசன்ஸ் வாங்க வேண்டும் என்ற உங்களது பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை இங்கு இப்போது விளக்காகத் தெரிந்துகொள்வோம்.

பேப்பர் ஸ்டிரா தயாரிப்பு பிஸ்னஸ்: ஏன் இதற்கு இப்போது டிமாண்ட் அதிகம்?

பிளாஸ்டிக் எதிரான பிரச்சாரம் மற்றும் மக்கள் மனநிலை அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச் சூழலை பாதிக்காத, எளிதில் மக்கக் குடிய இந்த பேப்பர் ஸ்டிராக்களின் தேவை அதிகரித்துள்ளது.

பேப்பர் ஸ்டிரா உற்பத்தி செய்யும் மெஷின் எங்கு கிடைக்கும்?

பேப்பர் ஸ்டிராக்களை பல்வேறு வகையில், அளவில், வடிவங்களில் தயாரிக்கும் மெஷின்களை சந்தையில் 1.25 லட்சம் ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. அவற்றை நாம் வாங்கும் போதே அதனை எப்படிப் பயன்படுத்துவது எனவும் நமக்குப் பல நிறுவனங்கள் பயிற்சிகளை வழங்குகின்றன. மூலப் பொருட்களை வாங்கவும் இந்த நிறுவனங்களே நமக்கு உதவுகின்றன.

பேப்பர் ஸ்டிரா பிஸ்னஸ் தொடங்க முதலீடு எவ்வளவு தேவைப்படும் ? கடன் கிடைக்குமா?

முழுமையாக ஆட்டோமேட்டிக் பேப்பர் ஸிடிரா மேக்கிங் ஆலை தொடங்க 20 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகலாம். ஆனால் 1.94 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், மீத பணத்தை கடன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அரசு மானியமும் வழங்கும். மின்சாரம், மெஷின், என அனைத்துக்கும் மானியம் கிடைக்கும் என காதி, கிராம தொழில் ஆணையம் கூறுகிறது.

பேப்பர் ஸ்டிரா பிஸ்னஸ் லாபகரமானதா?

காதி, கிராம தொழில் ஆணையம் தகவலின் படி மாதம் 80,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

Rs 2000 Note India

பேப்பர் ஸ்டிராவை விற்பனை செய்வது எப்படி?

பேப்பர் ஸ்டிரா பிஸ்னஸ் தொடங்குபவர்கள், தங்களது ஊர் மற்றும் அதன் அருகில் உள்ள ஜூஸ் கடைகள், இளநீர் கடைகள், மொத்த விற்பனை கடைகள் மூலம் விற்பனை செய்து லாபம் பார்க்கலாம். மேலும் பல ஜூஸ் பவுச் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது பேப்பர் ஸ்டிராவுக்கு மாறி வருகின்றன. அந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு இந்த ஸ்டிராக்களை விற்பனை செய்யலாம்.

வணிகம்2 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?