தொழில்நுட்பம்

ஏர்டெல் விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம்.. உறுதி செய்த ஊக்லா.. என்ன காரணம் தெரியுமா?

Published

on

ஏர்டெல் 5ஜி வேகத்தை விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம் என ஊக்லா வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன.

எனவே ஏர்டெல் மற்றும் ஜியோ இருவரில் எந்த நிறுவனத்தின் 5ஜி இணையதள வேகம் அதிகம் என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு விளக்கும் அளிக்கும் வகையில் ஏர்டெல் 5ஜி இணையதள வேகத்தை விட ஜியோ 5ஜி இணையதள வேகம் இரண்டு மடங்கு அதிகம் என ஊக்லா தெரிவித்துள்ளது.

ஏர்டெல் 5ஜி இணையதள வேகம் ஒரு நொடிக்கு 365.48 எம்பி என உள்ளது. அதே நேரம் ஜியோவின் 5ஜி இணையதள வேகம் 716.85 எம்பி என உள்ளது. ஜியோவின் டவுன்லோட் வேகம் 606.53 – 875.36 எம்பி ஆக உள்ளது.

ஜியோ 5ஜி வேகம் ஏன் அதிகமாக உள்ளது?

ஏர்டெல் நிறுவனம் இன்னும் 4ஜி தொழில்நுட்ப உதவியுடன் தான் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்கு என தனித்துவமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.

மேலும் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களிடம் 5ஜி சேவையை வழங்க சி-பேண்ட் மட்டுமே உள்ளது. ஆனால் ஜியோவிடம் சி-பேண்ட் உடன் சேர்த்து 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டும் உள்ளது. இவையே ஜியோ 5 சேவை வேகமாக இருக்கக் காரணம் ஆகும்.

5ஜி சேவை கட்டணம் உயருமா?

ஏர்டெல் நிறுவனம் இன்னும் 5ஜி சேவைக்கான பிரத்தியேக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாததால், குறைந்த கட்டணத்தில் 5ஜி சேவையை வழங்க முடியும். ஆனால் ஜியோவுக்கு 5ஜி சேவையை வழங்க கூடுதல் செலவு ஆகும். எனவே 4ஜி கட்டணங்கள் போல இல்லாமல் ஜியோ 5ஜி கட்டணங்கள் ஏர்டெல்லை விட சற்று அதிகமாக உயர வாய்ப்புள்ளது.

Trending

Exit mobile version