தமிழ்நாடு

வாடகை மட்டும் ரூ.120 கோடி வசூல்: இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Published

on

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கணினி வழியாக திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை வசூல் செய்யப்படுவதாகவும் இந்த வசதி தொடங்கியதிலிருந்து 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை ரூபாய் 120 கோடியே 18 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக கோவில்களில் அதிகமாக வசூல் செய்யப்பட்ட கோயில்கள் என்ற வரிசையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முதலிடத்தில் உள்ளதாகவும், அந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூபாய் 4.8 கோடி வரை வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறினார் .

மேலும்பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து ரூ.3.23 கோடியும், சென்னை, பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து ரூ.2.05 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இருந்து ரூ.1.79 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் இருந்து ரூ.1.43 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இருந்து ரூ.1.39 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

அதேபோல் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி பிறவிமருந் தீஸ்வரர் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேசுவரர் சுவாமி கோவிலிலும் கோடிக்கணக்கில் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்,

 

Trending

Exit mobile version