இந்தியா

பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்த யூடியூபர்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை

Published

on

By

பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்தவர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பூரி ஜெகநாதர் கோவில் ட்ரோன் மூலம் வீடியோக்கள் எடுத்ததாக தெரிகிறது. அதன்பின் அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூரி ஜெகன்நாதர் கோயில் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோயில் என்பதும் இந்த கோவிலில் ட்ரோன் மூலம் படம் எடுக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்காலி யூடியூபர் ஒரு வாரம் பூரி ஜெகநாதர் கோயிலை தனது குழுவினருடன் சேர்ந்து ட்ரோன் வீடியோ எடுத்து அதனை யூட்யூபில் பதிவு செய்துள்ளார். அனிமேஷ் சக்கரவர்த்தி என்ற அந்த நபர் மீது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறியபோது பூரி ஜெகந்நாதர் கோவில் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது என்றும் இதனை அடுத்து விதிகளில் சில மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுத்து இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பூரி ஜெகநாதர் கோவில் என்பது உலகப் புகழ்பெற்ற கோயில் என்பதால் அதன் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த கோயிலின் மேல் ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் கோவில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version