சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் நடிக்கும் ‘மைக் டைசன்’: அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகப் புகழ்பெற்ற ஹெவிவெயிட் மல்யுத்த சாம்பியன் மைக் டைசன் தமிழ் உள்பட ஐந்து இந்திய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் அவர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த மைக் டைசன்பத்து வயதாக இருக்கும் போதே தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அதிக குற்றம் புரியும் சூழ்நிலையை வாழ்ந்ததால் 13 வயதிலேயே கைது செய்யப்பட்டார். அவருடைய குத்துச்சண்டை திறனை உணர்ந்த அவரது பயிற்சியாளர் அவருக்கு சரியான முறையில் பயிற்சி அளித்து ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரராக மாற்றினார்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் தற்போது தமிழ் உள்பட இந்திய மொழிகளில் உருவாகி வரும் ’லைகர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க மைக் டைசன் ஒப்பந்தமாகி இருப்பதாக விஜய் தேவரகொண்டா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் மைக் டைசன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நாயகியாக அனைனா பாண்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய வேடத்தில் சார்மி கவுர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்த வருகின்றனர். புரி ஜெகந்நாத் என்ற பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.