உலகம்
World Breastfeeding Week: உலக தாய்ப்பால் வாரம் ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக கொண்டாடப்படுகிறது?

உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இந்த 7 நாட்களும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் படிக்க: தாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
இதன்மூலம் தாய்ப்பாலின் நன்மை, அவசியம் போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்படும்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவது எவ்வளவு முக்கியம் என்ற அவசியத்து வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு இரண்டும் இணைந்து 1990-ம் ஆண்டு ஆணை ஒன்றை வெளியிட்டது.
மேலும் படிக்க: தாய்ப்பாலில் உள்ள சக்தி குழந்தைகளுக்கு எவ்வாறு கிடைக்கிறது?
அதன்படி 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஆரம்பக் கட்டத்தில் 70 நாடுகளில் இதனைக் கொண்டாடி வந்த நிலையில், இப்போது 170 நாடுகள் இதனைக் கொண்டாடி வருகின்றன.