கிரிக்கெட்

பெண்கள் ஐபிஎல்.. ஒரு அணியில் விலை ரூ.450 கோடியா?

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 15 வருடங்கள் முடிவடைந்து 16வது வருட போட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளன. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பெண்கள் ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான அணிகள் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெண்கள் ஐபிஎல் போட்டியில் குறைந்தபட்சம் எட்டு அணி தேர்வு செய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான டெண்டர் ஆரம்பத்தொகை ரூபாய் 5 லட்சம் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது. ஐபிஎல் பெண்கள் அணியை வாங்குவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் தேதி ஜனவரி 23 மற்றும் டெண்டர் திறக்கப்பட்டு வெற்றியாளர்கள் யார் என்பது ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஐபிஎல் ஆண்கள் அணியை வாங்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளை வாங்கிய பிரபல நிறுவனங்கள் பெண்கள் ஐபிஎல் அணியையும் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் ஆச்சரியமாக ஒரு சில புதிய நிறுவனங்களும் ஐபிஎல் பெண்கள் அணியை வாங்குவதற்கு முன் வந்துள்ளன.

ஹல்டிராம், ரூட் மொபைல், நமன் குரூப் மற்றும் ஏபிஎல் அப்பல்லோ போன்ற சில நிறுவனங்கள் ஐபிஎல் பெண் அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. குறிப்பாக ரூட் மொபைல் இணை நிறுவனர்களான ராஜ்திப் குப்தா மற்றும் சந்தீப் குப்தா ஆகியோர் தனிப்பட்ட முறையில் பெண்கள் அணியை ஏலம் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் பெண்கள் அணிகள் 10 வருட உரிமத்திற்காக ஒரு அணிக்கு 350-450 கோடி ரூபாய் வரை செலுத்த நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் என்றாலே பணம் கொழிக்கும் விளையாட்டு என்பது கடந்த 15 ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆண்கள் ஐபிஎல் போல, பெண்கள் ஐபிஎல் போட்டிகளும் பணத்தை அள்ளி கொடுக்கும் ஒரு விளையாட்டாக இருக்கும் என கருதப்படுகிறது.

Trending

Exit mobile version