செய்திகள்

குழந்தை இல்லாத விரக்தி…பாலத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை…

Published

on

6 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தில் பாலத்திலிருந்து குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் இரும்பாலை பகுதியில் வசிப்பர் சுதா. இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இவருக்கு குழந்தை இல்லை. எனவே, ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனாலும் பலனளிக்க வில்லை. எனவே, அவர் விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில், சேலம் ஐந்து ரோடு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து அப்பெண் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதில், அவரின் 2 கால்களும் உடைந்ததோடு, உடலில் பல பாகங்களிலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரின் மரணம் அவரின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version