உலகம்

கர்ப்பம் என்று தெரியாமலேயே குழந்தை பெற்ற பெண்.. நடுவானில் பரபரப்பு!

Published

on

By

தனது வயிற்றில் குழந்தை வளர்வது கூட தெரியாமல் இருந்த விமான பயணி ஒருவர் நடுவானில் திடீரென குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்வடார் நாட்டை சேர்ந்த தமரா என்ற பெண் சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென வயிறு வலித்தது. இதனை அடுத்து அவர் கழிவறைக்கு சென்றபோது அவருக்கு வயிறு வலி அதிகமானது. இதையடுத்து விமானத்தில் பயணி ஒருவர் அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் முழு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவருக்கு குழந்தை பிறக்க உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து விமானம் நெதர்லாந்து நாட்டில் தரை இறங்கியவுடன் தமரா மற்றும் அவரது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

திருமணமாகி சில ஆண்டுகள் ஆன தமரா கர்ப்பமாக இருப்பது தெரியாமலே இருந்துள்ளார் என்றும் அப்போது வயிற்று வலி வாந்தி வந்தது கூட அவர் வேறு ஏதோ என்று புரிந்து கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் விமானத்தில் அவர் பயணம் கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பெற்றுள்ளார். மேலும் அவர் தனக்கு பிறகு பிரசவம் பார்க்க உதவிய மேக்ஸிமிலியோனா என்பவரின் பெயரையே தனது குழந்தைக்கு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமான பயணி ஒருவர் தனது வயிற்றில் இருப்பதை அறியாமல் இருந்த நிலையில் நடுவானில் திடீரென குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version