தமிழ்நாடு
எப்போது தாக்க வேண்டும் என சொல்கிறேன்..தொண்டர்களுக்கு அழகிரி அலெர்ட்

சென்னை: தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன் அதுவரை காத்திருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தி உள்ளார்.
திண்டுக்கல்லில் மு.க.அழகிரி பேரவை சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க அழகிரி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அழகிரி, திமுகவில் மாற்றம் செய்ய நேரம் வந்துவிட்டது. நான் தொண்டர்களுக்காக பேசினேன். அதனால் வெளியேற்றினார்கள்.

நான் பதவிக்காக அலைபவனில்லை.இது மாற்றத்திற்கான நேரம். திமுகவில் இருந்து என்னை சதி செய்து வெளியேற்றிவிட்டார்கள்.
தேர்தல் வரும்போது எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன்.தேர்தல் வரை காத்திருங்கள்.கருணாநிதியோடு என்னை ஒப்பிட்டு பேசவேண்டாம். தேர்தலின் போது செய்ய வேண்டியதை சொல்கிறேன், என்று கூறியுள்ளார்.
















