தமிழ்நாடு

தமிழக அரசின் கடன்கள், கஜானா நிலவரம் என்ன: 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை!

Published

on

தமிழக அரசுக்கு இருக்கும் கடன்கள் எவ்வளவு? கஜானாவில் உள்ள இருப்பு எவ்வளவு? என்பதை குறிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசு வாங்கிய கடன் எவ்வளவு? தமிழக அரசிடம் தற்போது கஜானாவில் உள்ள இருப்பு தொகை எவ்வளவு? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று ஏற்கனவே நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதன்படி ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த வெள்ளை அறிக்கை வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த வெள்ளை அறிக்கை வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள் முழுமையாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அரசில் வாங்கிய கடன்கள் மற்றும் நல திட்டங்களுக்கு செய்த செலவுகள் குறித்த முழு விவரங்களும் இந்த வெள்ளை அறிக்கையில் இருக்கும் என்பதால் அதிமுக அரசில் ஏதாவது முறைகேடு நடந்து இருந்தாலும் அதுவும் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுவரை தமிழகத்தில் இப்போதைக்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டது இல்லை என்பதால் இந்த வெள்ளை அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது

Trending

Exit mobile version