இந்தியா

Buy Now, Pay Later வசதியை பயன்படுத்தினால் சிக்கல் வருமா? கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

Published

on

தற்போது Buy Now, Pay Later என்ற முறை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கொஞ்சம் விரிவாக இதனை பயன்படுத்துவார்கள் தெரிந்து கொள்வது நல்லது.

வாடிக்கையாளர்களை எப்படியாவது கடன்காரர் ஆக்க வேண்டும் , அவர்களை தேவையில்லாமல் நிறைய பொருள்களை வாங்க வைத்து அவர்களை சிக்கலில் மாட்ட வேண்டும் என பல நிறுவனங்களின் குறிக்கோளாக இருக்கிறது.

தங்கள் நிறுவனங்களில் லாபத்திற்காக, தங்கள் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதற்காக, பணம் இல்லாத நபர்களை கூட தங்கள் தயாரிப்புகளை வாங்க வைக்கக்கூடிய ஒரு தந்திரம் தான் இந்த Buy Now, Pay Later என்ற முறை.

முன்பெல்லாம் பணம் இருந்தால் மட்டுமே ஒரு கடையில் சென்று பொருள் வாங்க முடியும். ஆனால் தற்போது கிரெடிட் கார்டு வசதி இருப்பதால் பணம் இல்லை என்றாலும் ஒரு பொருளை வாங்கிக்கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து செலுத்திக் கொள்ளலாம். அல்லது அந்த தொகையை தவணை மூலம் கூட செலுத்திக் கொள்ளலாம்.


கிரெடிட் கார்டு என்பதே பொதுமக்களை கடன் சிக்கலில் ஆழ்த்த கூடிய ஒரு விஷயம் என்றும், அதனால் கிரெடிட் கார்டு வாங்காமல் இருப்பதே நல்லது என்றும் பல பொருளாதார அறிஞர்கள் அறிவுறுத்து வருகின்றனர். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அந்த பொருளுக்கான காசை சேர்த்து மொத்தமாக பணம் கொடுத்து வாங்குவதுதான் நல்லது என்றும் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கிரெடிட் கார்டு வசதியை அடுத்து தற்போது Buy Now, Pay Later என்ற முறையும் கடந்த சில வருடங்களாக அறிமுகம் ஆகி வருகிறது. இந்தியாவில் இந்த முறை தற்போது மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் 2026 ஆம் ஆண்டுக்குள் 15 மில்லியன் அளவுக்கு Buy Now, Pay Later தொகை பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஷாப்பிங் செய்பவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருள்களை வாங்க அனுமதிக்கும் இந்த Buy Now, Pay Later, சரியான காலத்திற்குள் பணத்தை கட்டவில்லை என்றால் அபராதம் மற்றும் வட்டி என வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை கறக்க ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்திற்கு நிறுவனம் வட்டி மற்றும் அபராதம் வேறுபடும் என்பதால் இதனை பயன்படுத்தும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 15 முதல் 45 நாட்கள் வரை கால அவகாசம் கொடுக்கும் நிறுவனங்கள் ரூ.500 முதல் ஒரு லட்சம் வரை Buy Now, Pay Later றையை பயன்படுத்த அனுமதிக்கிறது.

இந்த வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் பணத்தை கட்டி விட்டால் எந்தவிதமான சிக்கலும் இருக்காது. ஆனால் பணத்தை கட்ட தவறினால் அவர்களுக்கு அபராதம் வட்டி என பண இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி கிரெடிட் ஸ்கோர்களிலும் பிரச்சனை ஏற்படும் என்பதால் இதை பயன்படுத்தும் முன் 100 முறை யோசித்துக் கொள்ள வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version