தமிழ்நாடு
தமிழ்நாட்டை பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? சீறிப் பாய்ந்த சீமான்.. பரபர கேள்வி

சென்னை: தமிழ்நாட்டை பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
வடஇந்தியர்கள் குறித்து அவதூறாகபேசியதற்காகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.
அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கோரிக்கை வைத்த நிலையில், சீமான் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் சீமான் தற்போது பிரஷாந்த் கிஷோரை விமர்சனம் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டை பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டில் பல இடங்களில் வட இந்தியர்களால், தமிழர்கள் தான் தாக்கப்பட்டுள்ளனர்
பிரசாந்த் கிஷோரை பாராட்டுகிறேன். நீங்கள் பிகாரி, உங்கள் இனத்திற்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன், என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன். இன்று கூலிக்கு வந்தவர்கள், நாளை முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கைகளுக்குச் செல்லும். நாம் நிலமற்ற அடிமைகளாக இருப்போம். அதனால்தான் எச்சரிக்கிறோம். வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறோம்
ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுப்பதற்கு பணம் இல்லை, ஆனால் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.4000 வரை பணம் கொடுப்பதற்கு எங்கு இருந்து பணம் வருகிறது. திமுகவிடம் 400 கோடிக்கு பணம் வாங்கிவிட்டு இவர் வேலை செய்தார். அதன் மூலம் திமுகவை வெற்றிபெற வைத்தார். என்னிடம் 4 ரூபாய் கூட வாங்கவில்லை. ஆனால் என்னை இந்தியா முழுக்க பிரபலப்படுத்திவிட்டார். அவருக்கு என்னுடைய நன்றிகள், என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.