யாஷிகா  டூ  சேரன்

விபத்தில் சிக்கிய நடிகர்கள்!

யாஷிகா ஆனந்த்

புதுச்சேரி சென்று சென்னை திரும்பும் போது யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியது. அதில் அவரது நண்பர் இறந்துபோனார். இவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் தனது 31வது படத்தின் சண்டைக் காட்சியின் போது எதிர்பாரா விதமாகக் காயம் ஏற்பட்டது. உடனே சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார் விஷால்.

விஷால்

நடிகர் ஜெய்யும் சண்டைக் காட்சியின் போது விபத்தில் சிக்கினார். வலது பக்க தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு அதற்குச் சிகிச்சை பெற்றார்.

ஜெய்

60 வயதிலும் ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட நடிகர் கார்த்திக், உடற்பயிற்சி செய்யும் போது அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இப்போது நலமுடன் உள்ளார்.

நடிகர் கார்த்திக்

சேரன்

ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடிக்கும் போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார் நடிகர் சேரன். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஃபகத் ஃபாசில் மலயான் குன்சு என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது சண்டைக்காட்சியில் அவருக்கும் மார்ச் மாதம் அடிப்பட்டது. இப்போது அவரும் ஓய்வில் உள்ளார்.

ஃபகத் ஃபாசில்

சில்லு கருப்பட்டி படத்தில் வயதான மனைவியை இழந்த ஒருவரின் ஏக்கம் குறித்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரீராம். வீட்டில் கால் தடுக்கி விழுந்து இவருக்குப் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஸ்ரீராம்

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் மாளவிக்கா. பிப்ரவரி மாதம் சைக்கிளில் செல்லும் போது கீழே விழுந்து இவரது கை விரல் உடைந்தது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

மாளவிக்கா