நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து ரக்‌ஷிதா வெளியேறக் காரணம் என்ன?

விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.

கொரோனா முதல் ஊரடங்கின் போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இடையில் நிறுத்தப்பட்டது.

பின்னர் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. ஆனால் மயனுக்கு ஜோடியாக நடித்த ரக்‌ஷா நீக்கப்பட்டு ரக்‌ஷிதா நடித்து வந்தார்.

இந்நிலையில் ரக்‌ஷிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகி அரண்மனைக் கிளி சீரியலில் நடித்த மோனிஷா நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாகவே ரக்‌ஷிதாவிற்கு நாம் இருவர் சீரியலில் காட்சிகள் குறைக்கப்பட்டன.

தொடர்ந்து ஏன் ரக்‌ஷிதாவின் காட்சிகள் குறைக்கப்பட்டது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

எனக்கு முக்கியத்துவம் இல்லாத வேடத்தில் நான் எப்படி நடிப்பது, எனவே நான் விலகுகிறேன் என ரக்‌ஷிதா கூறினார்.

அதற்குப் பதில் அளித்த ரக்‌ஷிதா எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இயக்குநரையும் தயாரிப்பு நிறுவனத்தையும் தான் கேட்க வேண்டும் என கூறினார்.

ரக்‌ஷிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவருக்குக் கிடைத்த பட வாய்ப்பு தான் என கூறப்பட்டு வருகிறது.

இதே போன்று பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கண்ணம்மா வேடத்தில் நடித்து வரும் ரோஷினியும் விலகுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எது எப்படியோ நடிகர்கள் மாறினாலும் தொடர்ந்து அந்த சீரியலுக்கு கிடைக்கும் ஆதரவைப் பொருத்து சீரியல் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.