நிவேதா பெத்துராஜுக்கு வந்த அந்த ஆசை! 

தமிழ்த் திரை உலகில் ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

டிக் டிக் டிக், சங்கத் தமிழன், திமிறு பிடித்தவன் உள்ளிட்ட படங்களிலும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் பிரபுதேவாவுடன் நடித்த பொன் மாணிக்கவேல், வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி உள்ள பார்ட்டி படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.

நிவேதா பெத்துராஜ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவிலில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில், தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பது சோர்வடைய வைக்கிறது.

என்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தைக் காண்பிக்கக் கூடிய கதாபாத்திரங்களைச் செய்ய விரும்புகிறேன்.

இதை பார்த்த பிறகாவது இயக்குனர் ஒருவர் கவர்ச்சி கதாபாத்திரத்துடன் வருவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தார். இவர் தந்தையர் பெயர் பெத்துராஜ். அவர் ஒரு தொழில் அதிபர்.

2015 ஆம் ஆண்டு, மிஸ் இந்தியா UAE போட்டியில் நிவேதா பெத்துராஜ் வென்றுள்ளார்.

கார் ரேஸ் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் இதற்கான முறையான பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.

துபாயிலேயே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் தான் என மிகவும் கர்வத்துடன் கூறும் நிவேதா சமீபத்தில் பார்முலா 1 கார் ரேஸிங்-க்கான முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.