விஜய் சேதுபதிக்கு விமான நிலையத்தில் நடந்தது என்ன?

சமீபத்தில் பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னாலிருந்து எட்டி உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இதன் பின்னணி என்ன? அவர் ஏன் விஜய் சேதுபதியை தாக்க முயன்றார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அந்த மர்ம நபர் பெயர் மகா காந்தி. பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் தீவிர பக்தர். மேலும், தன்னை தேசப்பற்று உள்ளவன் எனவும், சில படங்களில் நடித்துள்ளேன் எனவும் கூறி வருபவர்.

இதுபற்றி விளக்கமளித்த மகா காந்தி ‘அந்த விமானத்தில் விஜய் சேதுபதியை பார்த்தவுடன், தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இது தேசமா? எனக் டேட்டார்.

அதன்பின், குருபூஜையில் கலந்து கொண்டீர்களா எனக் கேட்டார். எந்த குரு எனக்கேட்டார். அதன்பின் விமான நிலையத்தில் தன் லக்கேஜுக்காக காத்திருந்த போது என்னை பின்னாலிருந்து சிலர் அடித்தனர்.

அது விஜய் சேதுபதியா இல்லை அவரின் ஆட்களா என எனக்கு தெரியாது. அந்த கோபத்தில்தான் அவரை தாக்க சென்றேன்’ என அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், விஜய் சேதுபதிபதி ‘அனைவருக்கும் வணக்கம். உங்கள் விஜய் சேதுபதி பேசுகிறேன். பெங்களூர் விமானத்தில் நிலைதவறிய நிலையில் ஒருவர் என்னை அணுகினார்.

நான் பிறகு பேசலாம் என்றேன். ஆனால், நீ என் ஜாதிதான பேசுப்பா, நானும் நடிகன்தான் என்பது போல சத்தமாக கேட்டப்படி வந்தார்.

மற்றபடி அவர் காணொளியில் சொல்வது போல தேசியத்தையும் தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை.

நான் ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நாடறியும். தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார். –