பீஸ்ட் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவன் புதிதாக இணைந்துள்ளார்.

காமெடிக்கு யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பாலிவுட்டிலிருந்து லில்லிபுட் என 3 பேர் இணைந்து கலக்க உள்ளனர்.

வில்லன் கதாபாத்திரத்தில் மலையளத்தில் இருந்து ஷைன் டாம் ஹாகோ நடிக்க உள்ளார். இவருடன் அபர்னா தாஸ் மற்றும் அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அனிருத் பீஸ்ட் படத்திற்கு இசை அமைக்கிறார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்‌ஷன், காமெடி, திரில்லர், காதல் என அனைத்தும் கலந்த படமாக பீஸ்ட் இருக்கும்.

விரைவில் பீஸ்ட் படக்குழு ரஷ்யா சென்று சில முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளது.

பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் பீஸ்ட் படத்தை தயாரிக்கிறார்.