வலிமை அட்டகாச படங்கள்!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.விநோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியான போது அது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.

வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘நாங்க வேற மாதிரி” அண்மையில் ரிலீஸ் ஆனது.

ஒரு கோடி பார்வையாளர்களை இந்த பாடல் பெற்று இருந்தாலும் இந்த பாடலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒருவேலை அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு, கேட்டு அதிக எதிர்பார்ப்பில் உள்ளார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ரஷ்யாவில் இன்னும் வலிமை படத்தின் சண்டைக் காட்சி மட்டும் ஷூட்டிங் எடுக்க வேண்டி உள்ளது.

முன்னதாக இப்போது வரை முழு படத்துக்குமான டப்பிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டது.

வலிமை படத்தில் குடும்பத்துடன் பாட்டு பாடி, ஆட்டம் போடு தல அஜித். வலைமையில் தல பெயர் என்னவாக இருக்கும்?

விடுபட்டுள்ள சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்பட்டால் வலிமை விரைவில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

ரஷ்யா சென்று சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடத்த தாமதமானால் பொங்கலுக்குத் தான் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித், விஜய் படங்கள் மோத வாய்ப்புள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் பொங்கல் ரிலீஸ் ஆக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.