ராதிகா சரத்குமார் பற்றி இதுவெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

1962-ம் ஆண்டு எம்.ஆர்.ராதாவுக்கும் அவரின் 3வது மனைவி கீதாவிற்கும், இலங்கையின் கொழும்பில் பிறந்தவர்தான் ராதிகா.

நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் உள்ளிட்டவர்கள் ராதிகாவுடன் பிறந்தவர்கள்.

நடிகரும் அரசியல்வாதியுமான ராதா ரவி ராதிகாவின் உடன்பிறவாது சகோதரர் ஆவார்.

பிறப்பால் திரைக் குடும்பத்தை சேர்ந்தவர் ராதிகா என்பதால் எளிதில் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானார்.

1978-ம் ஆண்டு தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படம் மூலம் திரை உலகில் அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் இவர் முக்கிய நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். சித்தி, அரசி உள்ளிட்ட சீரியல்களை இவரது ராடன் நிறுவனம் தான் தயாரித்தது.

சித்தி 2 சீரியலை தயாரித்து நடித்து வந்த ராதிகா,, அதிலிருந்து வெளியேறி தனது கணவருடன் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001-ம் ஆண்டு திருமணம் புரிந்தார். இவர்களுக்கு 2004-ம் ஆண்டு ராகுல் என்ற மகன் பிறந்தார்.

சரத்குமாரைத் திருமணம் செய்யும் முன்பு இருமுறை விவாகரத்து பெற்றவர் ராதிகா. முதல் கணவர் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன்.

இரண்டாவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த-ஹ ரிச்சர்டு ஹார்டி என்பவரை ராதிகா திருமணம் புரிந்தார்.இவர்கள் இருவருக்கும் ரயான் ஹர்டி என்ற பெண் குழந்தையும் உண்டு.

இப்போது இளம் நடிகர்களின் அம்மா மற்றும் பிற முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராதிகா திரை உலகில் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை இன்று கேக்-வெட்டி கொண்டாடியுள்ளனர்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா.