உலகின் டாப் 10 ஏர்லைன்ஸ்!

2021-ம் ஆண்டின் உலகின் டாப் 10 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் எவை என்ற பட்டியலை, ஆஸ்திரேலிய விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. முழு பட்டியல்...

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், உலகின் இரண்டாம் மிகப் பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஆகும்.

10. பிரிட்டிஷ் ஏர்வேஸ்

எவர் க்ரீன் குழுமத்துக்குச் சொந்தமான ஈவா ஏர் தைவானிலிருந்து செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 60 நாடுகளுக்கு ஈவா பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது.

9. ஈவா ஏர்

சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யுனைடட் ஏர்லைன்ஸ், உள்நாடு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை வழங்குகிறது.

8. யுனைடட் ஏர்லைன்ஸ்

ரிச்சர்ட் பிரான்சன் இணைந்து நிறுவிய பிரிட்டிஷ் விமான நிறுவனம் 1984 -ல் தொடங்கப்பட்டது.

7. விர்ஜின் அட்லாண்டிக்

ஹாங் காங்கிலிருந்து செயல்பட்டு வரும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

6. கேத்தே பசிபிக்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் அரசுக்கு சொந்தமான அரசாங்கத்திற்குச் சொந்தமானது.

5. எமிரேட்ஸ்

ஆஸ்திரேலியாவின் முதன்மையான விமான போக்குவரத்து நிறுவனம் குவாண்டாஸ் ஏர்வேஸ்.

4. குவாண்டாஸ் ஏர்வேஸ்

சிங்கப்பூரின் முதன்மையான விமான போக்குவரத்து நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

3. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

நியூசிலாந்தின் முதன்மையான விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் நியூசிலாந்து.

2. ஏர் நியூசிலாந்து

உலகின் டாப் சிறந்த விமான சேவை நிறுவனம் கத்தார் ஏர்வேஸ் என்று விமான மதிப்பீடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. கத்தார் ஏர்வேஸ்