தமிழ்நாடு பட்ஜெட் 2021

மக்கள் எதிர்பார்ப்பு என்ன?

10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக தலைமையிலான அரசு விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

விவசாயத்துக்காகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயத்துக்கு அதிக அறிவிப்புகள் வர அதிக வாய்ப்புள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட, பெட்ரோல், டீசல் மீதான் வாட் குறைப்பு குறித்து அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 சவரன் வரையிலான தங்க நகை கடன் தள்ளுபடி.

வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எண்ண இருக்கும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.