சுவாரஸ்ய தகவல்கள்!

யார் இந்த ஹன்சிகா மோத்வானி? 

பிறந்த தேதி: 09/08/1991

1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பிறந்த ஹன்சிகா மோத்வானிக்கு இன்று பிறந்தநாள். அவரது ரசிகர்கள் இவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியில் ஷக்கலக்க பூம் பூம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்ஷிகா. இந்த சீரியலில் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

2010-ம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான வேலாயுதம், தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் ஹன்சிகா அறிமுகமானார்.

கொழு கொழுவென்று இருக்கும் ஹன்சிகாவை சின்ன குஷ்பு என்று அவரது ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். நீங்க என்ன சொல்கிறீர்கள்.

வாலு படத்தில் நடிக்கும் போது சிம்புவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

இப்போது சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து மகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகா ஹன்சிகாவுக்கு 50வது படம். அண்மையில் மகா ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டவர்களுடன் பல்வேறு படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.

அண்மையில் தனது அம்மாவின் பிறந்தநாளை ஹன்சிகா சிறப்பாகக் கொண்டாடினார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவார். இந்த முறை அவர்களுக்கு உணவுப் பொருட்கள் மட்டும் வழங்கி பிறந்தநாள் கொண்டாடி உள்ளார்.

ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த்துக்கு அண்மையில் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுத்தது தான் இந்த அழகிய புகைப்படம்.