நடிகை பாவனா

பற்றி உங்களுக்குத் தெரியுமா?

2002-ம் ஆண்டு மலையாளத்தில் கமல் இயக்கிய நம்மல் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. 

அப்போது பாவனாவின் வயது 16. பிறந்த தேதி: 1986, ஜூன் 6

தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் என 75-க்கும் மேற்பட்ட படங்களில் பாவனா நடித்துள்ளார்.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் பாவனா அறிமுகமானார்.

வெயில், ஆர்யா, தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட தமிழ் படங்களில் பாவனா நடித்துள்ளார்.

2017-ம் ஆண்டு பாவனாவை நடிகர் திலீப் கூலிப்படை வைத்துக் கடத்திய வழக்கு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

2018-ம் ஆண்டு கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீன் என்பவரைப் பாவனா திருமணம் செய்துகொண்டார்.

கடைசியாக மறைந்த புனித் ராஜ்குமார் அண்ணன் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி 2 படத்தில் பாவனா நடித்து இருந்தார்.

அடுத்து இவரது நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.