தமிழக பட்ஜெட் 2021

சாமானியனுக்குக் கிடைத்தது என்ன?

2021-2022-ம் நிதியாண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

பெட்ரோல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன.

நாளை முதல் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் வரை குறைக்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். ஆனால் சரியான பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்தாண்டில் புதிதாக 10 கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற ரூ2756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

உரிய விசாரணைகளுக்குப் பின் கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு செயல்படுத்தப்படும்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1.88 கோடி இலவச வேட்டி- சேலைகள்; ரூ490 கோடி ஒதுக்கீடு.

கிராமங்களில் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை. ஜல் ஜீவன் திட்டம் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு. ஊதியம்ம் 300 ரூபாயாக உயர்வு.