முன்பே வா என் அன்பே வா

பூமிகா வெப் ஸ்டோரி!

தமிழில் விஜய்க்கு ஜோடியாக பத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா.

ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் படங்கள் இவருக்குத் தமிழ் ரசிகர்களிடையில் நல்ல பெயரை பெற்றுத்தந்தன.

சில்லுனு ஒரு காதல் படத்தில் இவர் நடிப்பில் உருவான முன்பே வா என் அன்பே வா பாடல் இன்றும் காதலர்களின் டாப் லிஸ்ட்டில் இருக்கும்.

எம்.எஸ்.தோணி படத்தில் தோணிக்கு அக்காவாகவும் பூமிகா நடித்து இருந்தார்.

தமிழில் குறைந்த படங்கள் நடித்து இருந்தாலும் தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

2007-ம் ஆண்டு தான் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரைத் திருமணம் செய்து கொண்டார். கடைசியாகத் தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது தமிழில் கண்ணை நம்பாதே என்ற படத்தில் பூமிகா நடித்து வருகிறார்.

1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்த பூமிகாவுக்கு இப்போது 42 வயதாகிறது. அண்மையில் இவர் நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சிகள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.