'எம்ஜிஆர் முதல் எஸ்டிஆர்' வரை.. டாக்டரேட் பட்டம் பெற்ற தமிழ் நடிகர்கள்!

எம்ஜி ராமச்சந்திரன் அவர்களுக்கு 1974-ம் ஆண்டு அரிசோனா உலக பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் 1986-ம் ஆண்டு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 2011-ம் ஆண்டு சர்ச் மேலாண்மை சர்வதேச நிறுவனம், புளோரிடா கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

சின்னி ஜெயந்த் அவர்களுக்கு மாற்று மருத்துவத்திற்கான சர்வதேச திறந்தவெளி பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது.

உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு 2005-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

நடிகர் நாசர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

நடிகர் பிரபுக்கு 2011-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

நடிகர் விஜய்க்கு 2007-ம் ஆண்டு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

நடிகர் விக்ரமுக்கு மிலன் பல்கலைக்கழகம் 2011-ம் ஆண்டு பல்கலைக்கழகம் பட்டம் வழங்கியது.

நடிகர் விவேக் அவர்களுக்கு 2015-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் 2015-ம் ஆண்டு கெளரவ பட்டம் வழங்கியது.

சிலம்பரசன் டிஆர்-க்கு 2022-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.