சன்னி லியோன் படத்தில் ஜி.பி.முத்து!

தமிழில் ஒரு படத்தில் நடிகை சன்னி லியோன் மற்றும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் தற்போது புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படம், காமெடி- த்ரில்லர் கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் சசிகுமார் உடன் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வடகறி என்னும் படத்தில் சன்னி லியோன் நடித்து இருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் சசிகுமார் மூலம் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தற்போது டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சசிகுமார் படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் ஜி.பி.முத்து நடிக்க உள்ளாராம்.

ஆக, சன்னி லியோன் மற்றும் ஜிபி முத்து ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தி ஜிபி முத்து ரசிகர்களால் வைரலாகப் பரவி வருகிறது.