த்ரிஷா,  நயன்தாரா, அனுஷ்கா  எல்லாம் தெய்வப்பெண்கள்!

சிம்புவின் திருமணம் எப்போ? ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்தவர் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா. இவர் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு ஐந்து மகா குருக்களிடம் தீட்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நடிகைகள் குறித்துக் கூறும்போது த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா மட்டுமின்றி பொதுவாக நடிகைகள் எல்லாருமே எல்லோரும் அன்புக்கு ஏங்குபவர்கள்.

பணத்திற்காக அவர்கள் நடிக்க வந்தாலும் ஒரு காலகட்டத்தில் அவர்களுக்குத் தொழில் மேல் கசப்பு தன்மை ஏற்படும்.

அப்போது அவர்கள் ஒரு துணையைத் தேடுவார்கள் என்றும், அந்த துணை துரோகம் செய்யும் போது அவர்களுக்கு மன வலி ஏற்படும்.

நடிகைகளிடம் கோடிக்கணக்கான பணம் இருப்பதால் எந்த மன்மதனையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள்.

உள்ளிருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு போலியான நடிப்பை வெளியே காட்டுவார்கள். அவர்களுக்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கும் வராது. 

அவர்கள் பாசத்துக்கு ஏங்குபவர்கள். உண்மையில் சொன்னால் அவர்கள் தான் உண்மையான தெய்வப் பெண்கள் என லட்சுமி அம்மா கூறினார்.

சிம்புவின் திருமணம் எப்போ? என்று பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில், அதிற்கும் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா  à®ªà®¤à®¿à®²à¯ அளித்துள்ளார்.

சிம்புக்குத் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கும். அதேபோல் சிம்புவின் குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கிறது.

சிம்பு என்னிடம் நேரில் வந்து கேட்டு அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டு தோஷ நிவர்த்தி செய்து கொண்டால் அவருக்குக் கண்டிப்பாகத் திருமணம் நடக்கும் என்று ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா கூறியுள்ளார்.