சிம்புவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு அடுத்து நடித்து வரும் படம் தான் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிம்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

ஏன் ஸ்டைலான காதல், ஆக்‌ஷன் திரைப்படங்களை எடுக்கும் கவுதம் மேனன் இயக்கத்தில் இப்படி ஒரு படமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பருத்தி வீரன் போன்று ஒரு கிராமத்துக் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது கவுதம்  à®®à¯‡à®©à®©à®¿à®©à¯ நீண்ட நாள் கனவு.

முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று தான் சிம்பு கவுதம் மேனன் இணையம் படத்துக்குப் பெயரிடப்பட்டு இருந்தது.

ஆனால், கதை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு சரியான கதை அமையவில்லை. எனவே கதைக்காக ஜெயமோகனை அணுகியது படக்குழு.

ஜெயமோகனின் 'அக்கினி குஞ்சொன்று கண்டேன்' என்ற நாவலை மையப்படுத்தி வெந்து தணிந்தது காடு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

வெந்து தணிந்தது நாடு படத்தின் ஷூட்டிங் இப்போது நடைபெற்று வருகிறது.

வெந்து தணிந்தது நாடு படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.