சீரியல் நடிகை 

சித்ரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பெரிய புகழைப் பெற்றவர் விஜே சித்ரா.

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகத் தனது பயணத்தைத் தொடங்கிய சித்ரா சின்னதிரையில் தவிக்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடிக்கும் போது அவரை பலரும் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்த்தனர்.

முல்லை, கதிர் பாத்திரங்கள் இடையில் நடைபெறும் ரொமான்ஸ், இவரது அழகிய பேச்சு, சிரிப்பு, முக பாவனைகள் இவருக்கேன் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.

ஆனால் திடீரென சித்ரா இறந்ததை அடுத்து, அவருடைய ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

சித்ரா இறந்த பிறகு அவர் நடித்த கால்ஸ் என்ற படம் திரை அரங்கில் ரிலீஸ் ஆனது. ஆனால் கொரோனாவிற்கு பிறகு திரை அரங்கங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால் படம் சரியா ஓடவில்லை.

இப்போது இந்த கால்ஸ் படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

கால்ஸ் படம் எப்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் விநாயகர் சதுர்த்தியின் போது ஒளிபரப்பாக வாய்ப்புகள் உள்ளது.

எனவே சின்னதிரை நடிகை சித்ராவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

கால்ஸ் படம், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றம் மற்றும் அதனால் பெண்கள் எடுக்கும் விபரீதமான முடிவுகள் பற்றி அலசும் ஒரு கதைக் கருக் கொண்டதாகும்.