பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஜெனிஃபர் வெளியேறியதற்கு என்ன காரணம்!

விஜய் டிவியில் மிகவும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சீரியல் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசி படும் கஷ்டங்களைப் பற்றிய கதை என்பதால் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெனிஃபர்.

இப்போது அந்த கதாபாத்திரத்தில் ரேஷ்மா என்பவர் மாற்றப்பட்டுள்ளார். எனவே ஜெனிஃபர் ஏன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.

ராதிகா கதாபாத்திரம் மற்றும் அவரது மகள் என இரு நடிகர்களும் மாற்றப்பட்டு இருந்தாலும், முன்பு நடித்த ஜெனிஃபர் முகம்தான் பலரும் விரும்பும் முகமாக உள்ளது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் ராதிகா கேரக்ட்டரில் இருந்து விலகியதற்கான காரணத்தைப் புகைப்படம் ஒன்றின் மூலமாக ஜென்ஃபர் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தைப் பார்த்த உடன் ஷாக் ஆகி விட்டீர்களா? ஆம் ஜெனிஃபர் 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரம் இன்னும் நெகட்டிவாக மாற உள்ளது. குடும்ப சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கும்.

அது தனது கர்ப்பகாலத்துக்கும் பிரச்சனையாக இருக்கும் என்று கருதிய ஜெனிஃபர், ராதிகா கதாபாத்திரத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஜெனிஃபருக்கு ஏற்கனவே சாந்தனவ் என்ற மகன் ஒருவன் உள்ளார். இப்போது அடுத்துப் பிறக்க இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஜெனிஃபரும் அவரது கணவரும் விரும்புகின்றனர்.

ஜெனிஃபர் 4 மாதம், 5 மாதம் மற்றும் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது தனது வயிற்றின் வளர்ச்சி எப்படி இருந்தது என்று இன்ஸ்டாகிரமில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டிசம்பர் மாதம் ஜெனிஃபருக்கு இரண்டாம் குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.