இந்தியாவின் தங்க  மகன்!

நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவின் 100 வருட தடகள போட்டி கனவை நிறைவேற்றியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதல் விளையாட்டில் 81.58 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை எறிதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

இரண்டாம் இடத்தை செக் ரிபப்ளிக் நாட்டை சேர்ந்த ஜாகூப் வாட்லெச் 86.67 மீட்டர் தொலைவிற்கு எறிதல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மூன்றாம் இடத்தையும் செக் ரிபப்ளிக் நாட்டை சேர்ந்த வாட்ஸ்லாவ் வெஸ்லி என்பவர், 86.44 மீட்டர் தொலைவில் வீசி வெங்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

2008-ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா என்பவர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்குத் தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

ஹரியானா மாநிலம், கந்தரா என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா.

மில்கா சிங், பி.டி.உஷாவுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் மிகப் பரிய சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கத்துடன் சேர்த்து இந்தியாவுக்கு இதுவரை நடப்பு ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

“டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டது! இன்று சாதித்தது என்றென்றும் நினைவில் இருக்கும்.  à®¨à¯€à®°à®œà¯ சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் குறிப்பிடத்தக்க ஆர்வத்துடன் விளையாடி, இணையற்ற திறமையைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்” என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா வீசிய ஈட்டி.

இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா வீசிய ஈட்டி.