இஞ்சினியரிங் முதல் பிக்பாஸ் வரை.. யார் இந்த  à®°à®®à¯à®¯à®¾ பாண்டியன்?

புடவையைக் கட்டிக்கொண்டு இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்து, அது வைரல் ஆனது மூலம் மிகப் பெரிய புகழை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன்.

நடிகர் அருண் பாண்டியன் ரம்யா பாண்டியனுக்கு சித்திப்பா. ரம்யா பாண்டியன் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பெறியியல் படித்துள்ளார்.

மணிரத்தினத்தின் உதவி இயக்குநர் ஷெல்லி இயக்கிய மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் முதலில் ரம்யா பாண்டியன் பணியாற்றினார்.

தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ரா ரா ராஜசேகர் என்ற படத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஒரு முக்கிய வேடம் கிடைத்தது. ஆனால் அந்த படம் இடையில் கைவிடப்பட்டது.

பின்னர் டம்மி டபாசு என்ற படம் மூலம் தமிழ் திரை உலகல் அறிமுகமானார். ரா ரா ராஜசேகர் படக்குழு ரம்யா பாண்டியனை ராஜு முருகனுக்கு அறிமுகம் செய்து வைத்தது.

ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த ஜோக்கர் படம் ரம்யா பாண்டியனுக்கு நல்ல பேரை வாங்கித்தந்தது. அதை பார்த்த சமுத்திரக்கணி இவருக்கு ஆண் தேவதை படத்தில் நடிக்க பரிந்துரைத்தார்.

நல்ல படங்களில் நடித்து இருந்தாலும் ரம்யா பாண்டியனுக்குப் பட வாய்ப்புகள் அதிகளவில் வரவில்லை. எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் 3-ம் இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் எவிஷன் பாஸை ஆஜித்துக்கு விட்டுக்கொடுத்து பலரது மனதில் இடம்பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-ம் இடம் பிடித்தார்.

இப்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்திலும், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்திலும் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.