நடிகை  வாணி போஜன் சுவாரஸ்ய தகவல்கள்!

சன் டிவியில் ஒளிபாரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.

சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்பு 3 வருடம் விமான பணிப்பெண்ணாக பணிப்புரிந்துள்ளார் வாணி போஜன்.

தெய்வமகள் சீர்யலுக்கு முன்பு சில திரைப்படங்களிலும், பிற சேனல் சீரியல்களிலும் வாணி போஜன் நடித்துள்ளார்.

2020-ம் ஆண்டு, அஷோக் செல்வனுடன் வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே படம் தான் இவருக்கு முதல் வெற்றிப்படம்.

2021-ம் ஆண்டு ஜீ5 ஓடிடியில் இவரது நடிப்பில் மலேஷியா டூ அம்னீசியா படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போது நடிகர் விக்ரமின் 60வது படத்திலும் வாணி போஜன் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கேஷினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட மேலும் 5 படங்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் இரண்டு தெலுங்கு படங்களிலும் வாணி போஜன் நடித்துள்ளார்.

படங்கள் மட்டுமல்லாமல் ட்ரிபிள்ஸ் எனற் வெப் சீரீஸ்லிலும் வாணி போஜன் நடித்துள்ளார். இது ஹாட் ஸ்டாரில் உள்ளது.