இன்றுடன் முடிந்தது ஒலிம்பிக் போட்டிகள்.. இந்தியா வென்ற 7 பதக்கங்கள் ஒரு பார்வை!

ஒலிம்பிக் 2020, கொரோனா ஊரடங்கு காரணமாக, ஜப்பானின் டோக்கியோவில்  2021-ம் ஆண்டு நடைபெற்றது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதற்கு முன்பு 6 பதக்கங்களை வென்றதுதான் சாதனையாக இருந்தது.

இந்தாண்டு ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

மீரா பாய் சானு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்தியர்கள் இருந்த போது, பளு தூக்கும் போட்டியில், 49 கிலோ எடை பிரிவில் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.

பிவி சிந்து பேட்மிட்டன் வீராங்கனையான பிவி சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்றார். முன்னதாக ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை பிவி சிந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

லவ்லினா போர்கோஹெய்ன் அசாமின் கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்சிங் வீராங்கனையான லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் பதக்கம் வென்றார்.

இந்திய ஹாக்கி அணி 40 வருடங்களுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. பெண்கள் ஹாக்கி அணியும் காலிறுதியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்ல முடியாமல் திரும்பியது.

பஜ்ரங் புணியா இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் பஜ்ரங் புணியா உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவர். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்றார்.

ரவி குமார் தஹியா டோக்கியோ ஒலிம்பிக் 57 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இறுதிப் போட்டிக்குச் சென்ற ரவி குமார் தாஹியா, போராடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 86.58 மீட்டர் தொலைவில் வீசி, தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் நீண்ட கால ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவானது.