யாஷிகா ஆனந்த்  பற்றி இதுவெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

பஞ்சாப் மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

துருவங்கள் பதினாறு படத்திற்கு முன்பாக ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளராகவும் இவர் நடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாஷிகாவுக்கு சரியான கதாபாத்திரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

2018-ம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 2-ம் பாகத்தில் பங்கேற்று, நடிகர் மகத் ராகவேந்திராவுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.

இப்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜோம்பிளி, மகத் ராகவேந்திராவுடன் ஒரு படம் என யாஷிகா நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் தான் சில நாட்கள் முன்பு மிகப் பெரிய விபத்தில் சிக்கி, இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்த யாஷிகா ஆனந்த், இந்த சிறிய வயதிலேயே மிகப் பெரிய புகழின் உச்சத்துக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.