ஆர்யாவின் மனைவி, சாயிஷா சண்டைக்காரி!

நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் தான் சாயிஷா.

2015-ம் ஆண்டு அகில் ஜோடியாகத் தெலுங்கு படத்தில் அறிமுகமானார் சாயிஷா.

தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினி காந்த், காப்பான், யுவரத்தினா உள்ளிட்ட படங்களில் சாயிஷா நடித்துள்ளார்.

2018-ம் ஆண்டு கஜினி காந்த் படத்தில் நடிக்கும் போது சாயிஷா, ஆர்யா இடையில் காதல் ஏற்பட்டது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி இருவரும் தங்களது காதலை டிவிட்டரில் தெரிவித்தனர். ஆர்யா, சாயிஷா இருவருக்கும் 2019 மார்ச் 8-ம் தேதி திருமணம் ஆனது.

அண்மையில் ஆர்யா, சாயிஷா தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்தது.

1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்த சாயிஷாவுக்கு இப்போது 23-வயது ஆகிறது.

சாயிஷாவின் பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நீங்கள் மிகவும் அன்பானவர் என்றும் உங்களைப் போன்ற அன்பான ஒருவரை மனைவியாகப் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி நான் அதிர்ஷ்டசாலி என்றும் ஆர்யா அந்த டிவிட்டரில் கூறியுள்ளார். மேலும் சாயிஷாவுடன் உள்ள கிளாமர் புகைப்படம் ஒன்றையும் அவர் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.