தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’!

தனுஷ் நடிக்கும் D44 படத்தின் பெர்யர் ‘திருச்சிற்றம்பலம்’ என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுசின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பை புதன்கிழமை ஒவ்வொன்றாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இந்த படத்தை இயக்குகிறார்.

ப்ரியா பவானி சங்கர் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இன்னொரு கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

மூன்றாவது கதாநாயகியாக நித்யா மேனன் இருக்கிறார்.

பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வில்லனா என்று தெரியவில்லை.

இயக்குநர் பாரதி ராஜாவும் தனுஷின் D44-ல் நடிக்கிறார்.

D44 படத்தின் டைட்டில் அறிவிப்பு ஆகஸ்ட் 5-ம் தெதி மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மித்ரன் ஜவஹர், தனுஷ் இணைவதால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இது போன்ற கூடுதல் சினிமா அப்டேகளுக்கு, www.bhoomitoday.com